Tuesday, May 15, 2012

வெந்தயக்கீரை சாம்பார் - VENDHAYA ( METHI ) KEERAI SAMBAR



 தேவையான பொருட்கள் :


வெந்தயக்கீரை  -  1 கட்டு 
துவரம் பருப்பு  -  100 கிராம் 
வெங்காயம்  - 1
தக்காளி  -  1
பச்சை மிளகாய் - 4 
காய்ந்த மிளகாய் - 2
புளி        - சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயப்பொடி - சிறிது 
மஞ்சள்பொடி  -  1 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு 
தட்டிய பூண்டு  -  5 பல்  
கறிவேப்பிலை  - 2 இனுக்கு 
கடுகு  -  1 டீஸ்பூன் 
எண்ணெய் -  தாளிக்க தேவையான அளவு 


செய்முறை:

              முதலில் துவரம்பருப்பை உறவைக்கவும். வெங்காயம் ,
தக்காளியை நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை  நடுவில் 
வகுந்து வைக்கவும்.  

                      


            பிறகு பருப்புடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், 
பூண்டு ,  பெருங்காயப்பொடி , மஞ்சள் போடி , சிறிது  கறிவேப்பிலை 
இவை அனைத்தையும்  சேர்த்து பருப்பை  வேகவைக்கவும்.  பருப்பு 
நன்றாக வேகட்டும் .

                  

         வெந்தயக்கீரையை சுத்தம் செய்து நன்றாக கழுவி எடுத்து அதனை
பொடியாக  நறுக்கிகொள்ளவும். 


      

         பருப்பு வெந்தபிறகு நறுக்கிய கீரையை சேர்க்கவும். பின்
புளிக்கரைச்சல்,  உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.  வெந்தபிறகு 
சூட்டை மிதமாக வைக்கவும்.

       ஒரு கடாயில்  எண்ணெய்  விட்டு சூடான பிறகு கடுகு சேர்த்து
வெடித்தும் காய்ந்த மிளகாயை போடவும் . பின் சிறிது 
வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து  வதக்கவும் . வதங்கிய பின் 
வெந்த பருப்புக்கீரையில் சேர்க்கவும் . சிறிது நேரம் கழித்து 
இறக்கிவிடவும். அருமையான வெந்தயக்கீரை சாம்பார் ரெடி. 



குறிப்பு :  சிறிது தேங்காய் ,சோம்பு  சேர்த்து அரைத்து தேவையானால் இதனுடன் சேர்த்துகொள்ளலாம். நான் தேங்காய் சேர்க்கவில்லை.
                  மிகவும் அருமையாக இருக்கும் வெந்தயக்கீரை சாம்பார்.
 

வெந்தயக்கீரையின் பயன்கள் :

  • மிகவும் குளிர்ச்சியானது . உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் . 
  • நம் உடலுக்கு தேவையான பல உயிர் சத்துக்கள் இதில் உள்ளன (புரதம், மெக்னீசியம் ,பொட்டாசியம், பாஸ்பரஸ் ).
  • இக்கீரையை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு , இரத்த மூலம் போன்ற உடல்  உபாதைகள் நீங்கும்.
  • வாரத்தில் மூன்று  அல்லது நன்கு முறை வெந்தயக்கீரை    சாப்பிட்டால் சர்க்கரை (DIABETES ) வியாதி குணமாகும் . 


16 comments:

நிரஞ்சனா said...

WoW! டயபடீ‌‌‌‌ஸைக் கட்டுக்குள்ள வெக்கற சக்தி வெந்தயக் கீரைக்கு உண்டா? புதுத் தகவல். உடலுக்கு குளிர்ச்சிதரும்னு வேற சொல்லிட்டீங்க விஜி. அதனால நான் இதுவரை சேர்த்துக்காத இந்தக் கீரையை அம்மாவை பண்ணச் சொல்லி சாப்பிட்டுப் பாக்கறேன் -நிச்சயமா உடனே. ரெண்டு நாளைக்குள்ள சாப்பிட்டுட்டு, உங்களுக்கு Feedback குடுப்பேன் இதே பதிவுல. OKva Friend?

VijiParthiban said...

வாங்க நிரூ உடனுக்குடன் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. உங்களது Feedback -க்காக காத்திருக்கிறேன்...

Mrs.Mano Saminathan said...

வெந்தயக்கீரை சாம்பார் பூண்டு சேர்த்து வித்தியாசமான முறையில் இருக்கிறது!

VijiParthiban said...

மனோ அக்கா
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. நம் நட்பு தொடரட்டும் அக்கா.......

இராஜராஜேஸ்வரி said...

வித்தியாசமான சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

VijiParthiban said...

உங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அக்கா.

VijiParthiban said...

வணக்கம் வை.கோ அய்யா அவர்களே ,
வருகைக்கு மிக்க நன்றி. .

நிரஞ்சனா said...

விஜி, நேத்திக்கு எங்கம்மா இதைச் செஞ்சாங்க. மசியல்ன்னு ஒண்ணு இந்தக் கீரையில் தேங்காய் சேக்காம அம்மா செய்வாங்க. அது எனக்குப் பிடிக்காது. ஆனா இது நல்லாவே இருந்துச்சு. முடியறப்பல்லாம் செய்யச் சொல்லியிருக்கேன். Really, Very Very Thanks ma!

VijiParthiban said...

அம்மா செய்து சாப்பிட்டு பார்த்து பதில் சொல்லிய என் அன்பு நிரூ தோழிக்கு மிக்க நன்றி.

VijiParthiban said...

உங்களது பதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நிரூ. உங்களது பதிலுக்காக காத்துக்கொண்டிருந்த எனக்கு பதில் அழித்தமைக்கு என் இதயம் கனிந்த நன்றி தோழிழிழிழிழிழிழி.................

Asiya Omar said...

நல்ல தகவலுடன் கூடிய அருமையான குறிப்பு.பார்க்கவே ருசிக்கத்தூண்டுது.

VijiParthiban said...

மிக்க நன்றி ஆசியா அக்கா.

Jaleela Kamal said...

மிக அருமை
உடலுக்கு குளிர்ச்சி வயிற்று புண்ணையும் ஆற்றும்

VijiParthiban said...

ஆமாம் அக்கா வயிற்று புண்ணையும் ஆற்றும். மிக்க நன்றி அக்கா.

குறையொன்றுமில்லை. said...

விஜி உங்க பக்கம் இன்னிக்குதான் வரேன் வெந்தயக்கீரை சாம்பார் நல்ல இருக்கு. நீங்க மும்பையில் இருக்கீங்களா. நானும் மும்பைதான் எங்க வீட்ல பிள்ளையார் வச்சிருக்கோம் 5 நாள் இருப்பார். நேரம் கிடைத்தால் வாங்க.என்மெயில் இட் echumi@gmail.com
நீங்க மெயில் அனுப்புங்க

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...